Published : 06,Mar 2019 02:55 AM

ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவரிடம் விசாரணை

Bomb-threat-to-Jayalalithaa-and-Rajinikanth-House

சென்னையில் உள்ள ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தொலைபேசியில் பேசிய அந்த நபர், இன்னும் சிறிது நேரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ரஜினிகாந்தின் வீடுகளில் வெடிகுண்டு வெடிக்கும் என சொல்லிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு விரைந்த போலீசார் அங்கு சோதனையை தீவிரப்படுத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

இதனிடையே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கோவையை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. அவருடைய பெயர் முகமது அலி என்பதும், மன அழுத்தம் காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுத்து பேசியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்