மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 40 தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்ள இருப்பதால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக மற்றும் மதிமுக இடையிலான மூன்றாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் பேச்சு வார்த்தையின் நிறைவில், மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியை ஒதுக்கீடு செய்தும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்குவது எனவும் உடன்பாடு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் ஸ்டாலினும், வைகோவும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 40 தொகுதிகளிலும் வைகோ பரப்புரை மேற்கொள்ள திமுக விரும்புவதால் அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide