கோடம்பாக்கம், ராமன்தேடிய சீதை உட்பட சில படங்களை இயக்கியவர் ஜெகன்நாத். இவர் இப்போது இயக்கி இருக்கும் படம், ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.ஏன் பாஸ் இப்படியொரு டைட்டில்? என்று கேட்டதும் சொன்னார்.
‘காதலியோட செருப்பைத் தேடி ஹீரோ அலையற கதைதான் இது. ஆனா, படம் முடிஞ்சு வரும்போது ஒரு நல்ல படத்தைப் பார்த்துட்டு வந்த திருப்தி கண்டிப்பா இருக்கும். தியேட்டர்ல உட்கார்ற இரண்டரை மணி நேரம் உங்களை சிரிக்க வச்சுக்கிட்டே இருக்க நான் கியாரண்டி. இதுல ஹீரோயினா ஆனந்தி நடிக்கிறாங்க. அவங்ககிட்ட கதையை சொன்னதும் கண்டிப்பா இந்தப் படத்துல நடிக்கிறேன்னாங்க. அப்புறம்தான் ஹீரோவை தேடினேன். பசங்க படத்துல நடிச்ச பக்கோடா பாண்டிய தமிழ்னு பெயரை மாற்றி, இதுல ஹீரோவா அறிமுகப்படுத்தறேன். அப்புறம் ஆனந்திகிட்ட, அவருக்கு வேண்டிய சில நடிகைகள், சினிமாக்காரங்க இருப்பாங்கள்ல, அவங்க போய், ’பக்கோடா ஜோடியாவா நடிக்க போற’ன்னு பயங்காட்டியிருக்காங்க. இதனால யோசிச்சாங்க. நான் போயி, அவர் நடிச்ச சில காட்சிகளை ஆனந்திகிட்ட காண்பிச்சதும் ஆச்சரியப்பட்டு, கண்டிப்பா இவரோட நடிக்கிறேன்னு சொன்னாங்க. பாண்டி, இந்தப் படம் மூலம் நடிப்புல வேற இடத்துக்கு போவார்’ என்றார் நம்பிக்கையாக.
படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், விஜயன் தயாரிக்கிறார்கள். ‘அதென்னங்க முருங்கைக்காய் புரொடக்ஷன்’என விஜயனிடம் கேட்டால், ‘எங்க ஊர்ல (வெடிக்காரன் பட்டி) இயற்கை விவசாயம் பண்றோம். முருங்கைக்காய்தான் அதிகமா வளர்க்கிறோம். அதுல வந்த காசுலதான் தயாரிக்கிறோம். அதனாலதான் கம்பெனிக்கு இப்படியொரு பெயர்’ என்கிறார் சிரிக்காமல்...
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை