[X] Close

“எந்தத் தொகுதிகள் என்பதை தற்போது கூறமுடியாது” - வைகோ பேட்டி

DMK-and-MDMK-Parliament-Alliance---Vaiko-Speech-about-Status

மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 


Advertisement

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “வருகின்ற 17வது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதனுடன் சேர்த்து நடத்தவுள்ளதாக கூறப்படும் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இன்று பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று திமுக தரப்பிலிருந்து திடீரென தகவல் கிடைத்தது. ஆனால், எங்கள் தேர்தல் குழு நிர்வாகிகள் உடனடியாக வர இயலவில்லை. 


Advertisement

எனவே நாளை எங்கள் நிர்வாகிகளுடன் தலைமை அலுவலகத்தில் ஆலோசித்து, பின்னர் மாலை திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன் ஆகியோருடன் பேசி தொகுதிப் பங்கீடு செய்யப்படும். இன்று பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை என்பதை போனில் சொல்வது நன்றாக இருக்காது என்பதால், நேரில் சொல்லிவிட்டு போக வந்தேன். மற்றபடி, பேச்சுவார்த்தை சுமூகமாகத்தான் நடைபெறுகிறது. எந்தத் தொகுதிகள் கேட்கிறோம் என்பதை தற்போது கூறமுடியாது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை திமுகவுடன் மக்களவைத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டன. இதில், இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், அவை எந்தத் தொகுதிகள் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியும் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் திமுகவுடனான கூட்டணி பங்கீட்டை நாளை இறுதி செய்யும் எனப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close