ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்துக்கு பேய் மாமா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலு, கடந்த 2015 ஆம் ஆண்டு ’எலி’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்திருந்தார். இதற்கிடையே சிம்புதேவன் இயக்கும், ’இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தில் அவர் நடிக்க இருந்தார்.
இயக்குனர் ஷங்கரும் லைக்கா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்க இருந்த இந்தப் படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக வடிவேலு இந்தப் படத்தில் நடிக்காமல் இழுத்தடித்தாராம். இதனால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத் திலும் நடிகர் சங்கத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு ரெட் போடப்பட்டது. அவரை படங்களில் நடிக்க வைக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் வாய் மொழி உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்பட்டது. இதனால் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. படத்துக்கு ’பேய் மாமா’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதுபற்றி படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.
ஷக்தி சிதம்பரம் இயக்கிய ’இங்லீஷ்காரன்’, ’கோவை பிரதர்ஸ்’ படங்களில் ஏற்கனவே வடிவேலு நடித்திருந்தார், அந்த படங்களின் காமெடி ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்