தேமுதிகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நாளை நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேமுதிக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தேமுதிகவுடன் அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியதால் திமுக கூட்டணியில் தேமுதிக இணையப் போவதாக பேச்சு எழுந்தது. எனினும் கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பையும் இதுவரை தேமுதிக வெளியிடவில்லை.
தேமுதிக எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். கூட்டணி கட்சித் தலைவர் களுடன் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். எனவே நாளை கூட்டணி குறித்த முடிவை தேமுதிக இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?