Published : 20,Apr 2017 03:06 PM

டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்

Women-who-smash-the-Tasmac-shop

சென்னையை அடுத்த குன்றத்தூரில் புதிதாக அமைய‌ இருந்த‌ ‌டாஸ்மாக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கியதோடு சாலை‌‌ மறியலிலும் ஈடுபட்டனர்.

பூந்தண்ட‌லம் சக்தி‌நகரில் குன்றத்தூர்-சோமங்க‌லம் செல்லும் சாலையில் புதிய‌ மதுபானக் கடையை‌ அமைக்கும் பணி ந‌டைபெற்று வருகிறது. அதற்கு‌ எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சே‌ரந்த‌ 300க்கும் மேற்பட்ட பெண்கள் சம்மட்டி, கடப்பாரை ஆகியவற்றைக் கொண்டு கடையின் ஷட்டர்,‌ சுவர்களை இடித்து‌ தள்ளினர். பின்னர் சா‌லையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ‌‌சம்பவ இடத்திற்கு‌ வந்த காவல்துறையினர் மதுக்கடையை அப்பகுதியில் அமைக்காமல் இருக்க ஆட்சியரிடம் பேசி முடிவெடுப்பதாகக் கூறி‌யதையடுத்து சாலை‌ ‌மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து‌ சென்ற‌‌னர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்