Published : 03,Mar 2019 05:40 AM
காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் இன்று உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாபாகண்டில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பயங்கரவாதிகள் எங்கே இருக்கிறார்கள் என தேடிச் சென்றபோது, பாதுகாப்பு படையினருக்கும், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
நேற்று மூன்றாவது நாளாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் இரண்டு ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரரில் ஒருவர் இன்று உயிரிழந்தார். இதனையடுத்து வீரமரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.