காதல் திருமணம் செய்த மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், கத்தியால் குத்தியதில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் செந்தூரான் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ்(36). இவரது மனைவி ஜேஸ்மின் (34). கணவன், மனைவி இருவரும் பனியன் தொழிலாளர்கள். இவர்களுக்கு கிஷோர்(12), பிரசன்னா (9) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் தர்மபுரியிலுள்ள ஜேஸ்மினின் பெற்றோர் வீட்டில் வளர்ந்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களாகவே மனைவி மீது கணவருக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குடும்பத் தகராறை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் தலையிட்டு சமரசம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை நீண்ட நேரமாகியும் முருகேஷின் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அருகிலுள்ளவர்கள், வீட்டருகே சென்று பார்த்தபோது வீட்டினுள் உடல் முழுக்க கத்திக்குத்துக் காயங்களுடன் ஜேஸ்மின் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜேஸ்மினின் உடலைக் கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கணவன், மனைவி இருவரும் பரஸ்பரம் நடத்தையில் சந்தேகமடைந்து தகராறு செய்து வந்ததும், நேற்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முருகேஷ் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் முருகேஷ் தாமாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!