[X] Close

அவமானப்படுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதா?: முனுசாமி

KP-Munusamy-blames-sasiakala-camp

சசிகலா அணியினர் அவமானப்படுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள் என ஓபிஎஸ் அணியின் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார்.


Advertisement

சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓபிஎஸ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கே.பி.முனுசாமி, அவமானப்படுத்திவிட்டு பேச்சவார்த்தைக்கு அழைக்கிறார்கள் என சசிகலா தரப்பினர் மீது குற்றம்சாட்டினார். மக்கள் செல்வாக்கு இல்லாத அணியாக சசிகலா தரப்பினர் இருப்பதாக கூறிய அவர், ஜெயக்குமார் பக்குவமில்லாத அரசியல்வாதி என்றும் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகளை நாங்கள் கோரவில்லைலை. சம்பந்தமில்லாமல் தம்பிதுரை பேசிவருகிறார். மக்கள் செல்வாகக்கு உடைய தலைவர் ஓ.பன்னீர்செவ்லம். தொண்டர்களின் ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கே உள்ளது. தேர்தல் நடந்தால் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தான் தேர்வு செய்யப்படுவார்”.


Advertisement

“குற்றவழக்குகள் இருப்பதால் டிடிவி தினகரன் பயப்படுகிறார். தினகரனை வெளியேற்றி நாடகம் நடத்துகின்றனர். சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதம் பெற வேண்டும். கட்சியில் இருவரையும் வெளியேற்றியதை அறிக்கையாக தர வேண்டும். சசிகலா தயவால் முதலமைச்சரான பழனிசாமி எப்படி மக்களுக்காக செயல்பட முடியம்” எனவும் கேள்வி எழுப்பினார்.


Advertisement

Advertisement
[X] Close