பங்களாதேஷூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் விளாசினார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முத லாவது டெஸ்ட் கிரிக்கெட், ஹாமில்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இத னால் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பாலின் சிறப்பான சதத்தால், அந்த அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. அவரைத் தவிர வேறு யாரும் நிலைத்து நிற்காததால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 234 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தமிம் இக்பால் 126 ரன் எடுத் தார். நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 5 விக்கெட்டை அள்ளினார். சவுதி 3 விக்கெட்டையும் போல்ட், கிராண்ட்ஹோம் தலா ஒரு விக்கெட் டையும் வீழ்த்தினர்.
(ராவல்)
பின்னர் முதல் இன்னிங்ஸை நியூசிலாந்து அணி தொடங்கியது. அந்த அணியின் ஜீத் ராவலும் டாம் லாதமும் தொடக்க வீரர்களாக களமிறங் கினர். சிறப்பாக ஆடிய ராவல் அபார சதம் அடித்தார். இது அவருக்கு முதல் சதம். அவர் 132 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டாம் லாதமும் சதம் அடித்தார். 161 ரன் எடுத்த அவர், சவும்யா சர்கார் பந்துவீச்சில் மிதுனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப் டன் கேன் வில்லியம்சன் ஒரு பக்கம் நிலைத்து நிற்க, மறுமுனையில் டெய்லர் (4 ரன்) நிக்கோலஸ் (53 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 451 ரன் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 93 ரன்னுடனும் நீல் வாக் னர் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
(கிராண்ட்ஹோம்)
இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய வாக்னர் 47 ரன்னிலும் அடுத்து வந்த வாட்லிங் 31 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேற, ஒரு பக்கம் நங்கூரமாக நின்ற கேன் வில்லியம்சன் இரட்டை சதம் விளாசினார். 143 பந்தில் சதம் கண்ட வில்லியம் சன், 257 பந்துகளை சந்தித்து இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு இரண்டாவது இரட்டை சதம்.
அப்போது அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 715 ரன்னாக இருந்தது. நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸில் 700 ரன்னுக்கு மேல் எடுப்பது இதுதான் முதல் முறை. இதையடுத்து அந்த அணி டிக்ளேர் செய்தது.
வில்லியம்சன் 200 ரன்னுடனும் கிராண்ட்ஹோம் 76 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்