தாறுமாறாக ஓடி தலைக்கீழாக சுழலும் கார் : கோவையில் பரபரப்பு

தாறுமாறாக ஓடி தலைக்கீழாக சுழலும் கார் : கோவையில் பரபரப்பு
தாறுமாறாக ஓடி தலைக்கீழாக சுழலும் கார் : கோவையில் பரபரப்பு

கோவையில் திரைப்பட பாணியில் தாறுமாறாக ஓடிய கார் தலைக்கீழாக சூழலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. கோவை-அவினாசி சாலையில் சூலூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது அந்த கார் திரைப்பட பாணியில் தாறுமாறாக ஓடி விபத்துகுள்ளானது. இந்த விபத்தின் காட்சிகள் அந்த சாலையிலிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

அதில்,அவினாசி சாலையில் திருப்பூர் நோக்கி செல்லும் பாதையில் அதிவேகமாக வரும் கார், சாலையின் மறுபுறம் குறுக்கே சென்றதும், எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த காரின் மீது மோதியது. பின்பு தலைக்கீழாக சுழல்வதும் அதில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்தியவர் கோவையை சேர்ந்த நிஷாந்த் என்பதும், எதிர் திசையில் வந்தவர் சோமனூரை சேர்ந்த ராஜு என்பதும் தெரியவந்துள்ளது. 

மேலும் ராஜு லேசான காயங்களில் தப்பிய நிலையில்,விபத்திற்கு காரணமான நிஷாந்த் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்திற்கான காரணம் குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா காட்சிகள் போல் நடந்த இந்த விபத்து பிற்பகலில் நடந்தது அங்கிருந்த மக்களை பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விபத்துகுள்ளான அந்த இரு கார்களும் அப்பலம் போல நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com