ஆஸ்திரேலியா அணியுடனான டி20 தொடர் தோல்விக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வே காரணம் என முன்னாள் வீர்ர்களான சஞ்சய் மஞ்ச்ரேகர் மற்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுபயணம் செய்து விளையாடிவருகிறது. இதில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் நேற்று வென்றது. முதல் டி20 போட்டியில் கடைசி பந்தில் இந்திய அணி வெற்றியை தவர விட்டது. இதனையடுத்து இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது.
பின்னர் 191 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஆஸ்திரேலிய அணி 22 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. எனினும் ஷார்ட் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்டது. இறுதியில் மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி எளிதில் இலக்கை எட்டியது. அத்துடன் 2-0 என்ற அடிப்படையில் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் சரியான அணி தேர்வு இல்லாதது தான் என்று முன்னாள் வீரர்கள் சஞ்சய் மஞ்ச்ரேகர் மற்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேகர் தனது ட்விட்டரில் பக்கத்தில், “உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வில் ஆயுத்தமாக இருந்தாலும். நேற்று விளையாடிய இந்திய அணிதான் சமீப காலங்களில் விளையாடியதில் மிகவும் பலவீனமான பந்துவீச்சை கொண்டிருந்த இந்திய அணி” எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும் ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐந்து பவுலர்கள் மட்டும் அணியில் விளையாடும் போது அதில் ஒருவருக்கு மோசமான நாள் என்றால் அது அணிக்கு மிகவும் கடினம். நேற்று இந்திய அணியின் சாஹலின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. ஆனாலும் இந்தியாவிற்கு வெறு எந்த பவுலரும் இல்லை என்பதால் இதை தவிர்க்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக அடையும் இரண்டாவது டி20 தொடர் தோல்வியாகும்” எனக் கூறியுள்ளார்.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்