Published : 20,Apr 2017 07:08 AM

காவி உடையில் ராஜிவ் கொலைக்குற்றவாளி

rajiv-murder-convict-murugan-found-in-saint-outfit

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜார் படுத்தப்பட்டார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் முருகன். கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அவரது சிறை அறையில் இருந்து 2 செல்போன்கள் மற்றும் சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தப்பட்டார். ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் முருகன், 26 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் மீண்டும் மீடியா வெளிச்சத்துக்கு வந்துள்ளார். காவி உடை, நீண்ட தாடி என துறவறம் மேற்கொண்ட நிலையில் முருகன் காணப்பட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்