[X] Close

தமிழக ஆளுநருடன் தம்பிதுரை சந்திப்பு

thambidurai-and-jeyakumar-meets-governor

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை சந்தித்தனர்.


Advertisement

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சசிகலா குடும்பத்தினர் அதிமுகவை விட்டு விலக முடிவு செய்துள்ளதை அடுத்து, இந்த இரண்டு அணிகளும் ஒன்றாக இணைய உள்ளன. இது பற்றி பேச இரண்டு அணிகளும் தனித்தனி குழுக்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், கவர்னர் வித்யாசாகர் ராவை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இரு அணிகளும் இணைய உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close