மிக் 21 ரக விமானத்தில் சென்ற இந்திய விமானி ஒருவர் இன்னும் திரும்பவில்லை என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லையில் விமானப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
இன்று காலை எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்து. அதேநேரம் இரண்டு இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. அத்துடன் ஒரு இந்திய விமானி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்திருந்தது. இந்தியா இதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மை இல்லை என இந்திய விமானப் படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய விமானி ஒருவர் திரும்பவில்லை என விமானப்படை தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மிக்-21 ரக விமானத்தில் சென்ற அவர் இதுவரையிலும் திரும்பாததால், அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுகிறது. இந்த சூழலில் ஒருவர் திரும்பாதது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பாகிஸ்தான் விமானம் அத்துமீறிய போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் விமானி காணவில்லை என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
Loading More post
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்