[X] Close

பிறந்த நாள் கேக் வாங்க சென்றவர் பலியான சோகம்

birthday-person-dead-in-an-accident

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பிறந்த நாளிலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

பெரியகாளப்பட்டியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (23). திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று பிறந்த நாள்

என்பதால் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவர் தனது பிறந்தநாள் விழாவுக்காக கேக் வாங்க, இருசக்கர வாகனத்தில் தமது நண்பருடன் சென்று கொண்டிருந்தார்.


Advertisement

உசிலை ஊரணி என்ற இடத்தில் எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் படுகாயமடைந்த ஹரிஹரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயங்களுடன்

மீட்கப்பட்ட அவரது நண்பர் சண்முகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிறந்த நாளிலேயே வாலிபர் ஹரிஹரன் இறந்த சம்பவம் அந்த கிராம

மக்களை சோகத்தில் ஆழ்த்தியது


Advertisement
Related Tags : ambulance accidentaccident ambulance

Advertisement

Advertisement
[X] Close