[X] Close

“விரைவில் க்ளியர் ஹிஸ்டரி ஆப்ஷன்” - பேஸ்புக் அறிவிப்பு

Facebook-s--Clear-History--Feature-Scheduled-to-Release-Later-This-Year

'க்ளியர் ஹிஸ்டரி' (Clear History) ஆப்ஷன் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் பேஸ்புக். வெறும் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி வியாபார சந்தையாக பேஸ்புக் உள்ளது. சிறிய கடைகள் பெரிய நிறுவனங்கள் முதல் பேஸ்புக் வாயிலாக தங்கள் நிறுவன பொருட்களுக்கு விளம்பரம் கொடுக்கின்றனர். நவீன வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட பேஸ்புக், பலரது தகவல்களை திருடி வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. கடந்த வருடம்  5,60,000 இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம், அதற்காக மன்னிப்பும் கோரியது.


Advertisement

இந்நிலையில் இணையத்தில் நாம் ஏதோ ஒரு பொருளைக்குறித்து தேடினாலோ, அல்லது பேஸ்புக் பக்கத்தில் இருக்கும் விளம்பரத்தை க்ளிக் செய்தாலோ அது நம்மை துரத்திக்கொண்டே இருக்கும். நாம் இணையத்தின் எந்தப் பக்கத்துக்குச் சென்றாலும் நாம் தேடிய பொருளின் விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் நாம் பேஸ்புக்கில் செய்யும் ஒவ்வொரு தேடலும் ஒரு ஹிஸ்டரி போல பதிவாகும். 

அந்த ஹிஸ்டரை பதிவுகளை வைத்து மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்கள் நம்மை குறி வைக்கின்றன. இது ஒரு விளம்பர உத்தி என்றாலும், நாம் தேடுவதையும், நம்முடைய ஒவ்வொரு க்ளிக்கையும் கூட பேஸ்புக் கண்காணிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 
'க்ளியர் ஹிஸ்டரி' (Clear History) ஆப்ஷனை கொண்டு வர பேஸ்புக் முடிவு செய்துள்ளது.


Advertisement

இந்த க்ளியர் ஹிஸ்டரி ஆப்ஷன் மூலம் மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்களும், இணையபக்கங்களும் உங்களின் தகவல்களை சேர்த்து வைக்க முடியாது என்றும், ஒருமுறை உங்களது ஹிஸ்டரி டெலிட் செய்யப்பட்டால் சேமிக்கப்பட்ட தகவல்கள் அழிந்துவிடும். இந்த க்ளியர் ஹிஸ்டரி ஆப்ஷன் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி பாசிலோனாவில் நடைபெற்ற தொலைத்தொடர்பு ஊடகங்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில்    தெரிவித்துள்ளார்.


 


Advertisement

Advertisement
[X] Close