[X] Close

இருந்த ஒரு டாக்டரும் லீவு: அவதியில் கர்ப்பிணிகள்

no-doctor-in-periyakulam-maternity-center

பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேரு மருத்துவர் இல்லாத நிலையில் பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெரியகுளத்தில் இயங்கிவரும் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக, ஒரு மருத்துவர் மட்டும் பணியில் இருப்பதால் இரவு நேரத்தில் மகப்பேறு மருத்துவப்பிரிவில் மருத்துவர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கர்பிணி பெண்கள் பெரும் அவதிக்குள்ளவதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பெரியகுளம் மகப்பேறு மருத்துவ பிரிவில் போதிய மகப்பேறு மருத்துவர்களை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, மகப்பேறு மருத்துவப் பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் விடுமுறை எடுத்ததால் ஒரு மருத்துவர் மட்டும் தொடர்ந்து இரண்டு நாட்கள் பணியாற்றினார். இந் நிலையில் அவரும் விடுப்பு எடுத்து சென்றதால் சில நாட்களுக்கு முன் ஒருநாள் மட்டுமே, மகப்பேறு மருத்துவர் இல்லாத நிலை ஏற்பட்டது. தற்பொழுது பகல் மற்றும் இரவு நேரத்தில் பணி புரிய இரு மருத்துவர்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close