Published : 26,Feb 2019 04:50 PM

தொழில் போட்டியால் 2 பெண்கள் மீது தாக்குதல் - திமுக பிரமுகர் மீது புகார்

2-Women-Attacked-by-DMK-Person-in-Pudukottai

புதுக்கோட்டையில் தொழில் போட்டி காரணமாக 2 பெண்களை திமுக ஒன்றிய செயலாளர் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கால பைரவர் கோயிலில் உடைக்கும் தேங்காயை சேகரிக்கும் ஏலத்தை வாசுகி என்பவர் நடத்தி வந்துள்ளார். அவர் கோயில் அருகே தேங்காய் மற்றும் பழக்கடையையும் நடத்தி வந்துள்ளார். இந்தாண்டு திமுக ஒன்றிய செயலாளர் சரவணனின் சகோதரர் சிவராமன் தேங்காய் சேகரிக்கும் ஏலம் எடுத்துள்ளார். இருப்பினும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாசுகியின் கடையில் தேங்காய், பழம் வாங்குவதால் தங்களுக்கு வியாபாரம் நடைபெறவில்லை என்று அவர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

அத்துடன் திமுக ஒன்றிய செயலாளரும், அவரது சகோதரருமான சரவணன், வாசுகியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடையை காலி செய்ய வலியுறுத்தி அதனை அடித்து நொறுக்கியதாகவும், வாசுகியையும் அவரது சகோதரியையும் தாக்கியதாகவும் சரவணன் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்