ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்யக்கோரி, மார்ச் 9 ஆம் தேதி மனிதச் சங்கிலி நடத்தப்போவதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அறிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 7 பேரை விடுவிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதும், தற்போது சட்டப் பிரிவு 161ஐ பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாநில அரசே விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அதை அனுப்பி இருந்தது.
இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் 9 ம் தேதி பல்வேறு நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த போவதாக பேரறிவாளன் தயார் அற்புதம்மாள் அறிவித்துள்ளார்.
இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள பல்வேறு வழக்கறிஞர்களை சந்தித்து மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழக அரசின் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைத்து 6 மாதங்கள் முடிவடைய உள்ளது. ஆனால் ஆளுநர் இன்னமும் அதில் கையெழுத்து இடவில்லை. இதை வலியுறுத்தி ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து வருகிறேன். இதுவரை 18 மாவட்டங்களில் சந்திப்பு நடத்தியுள்ளேன். வரும் மார்ச் 9 ஆம் தேதி 7 நகரங்களில் மனிதச் சங்கிலி ஏற்பாடு செய்துள்ளேன். அனைவரும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
Loading More post
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்