சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனை தமிழக அரசு விரைவில் கண்டுபிடித்து மக்கள் முன் நிறுத்த வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார்.
செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை காணவில்லை என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆன நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முகிலனை கண்டுபிடித்து தரக் கோரி பல்வேறு தரப்பினும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, இயக்குநர்கள் அமீர், கவுதமன், ராஜூ முருகன், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, முகிலன் காணாமல் போய் 10 நாட்கள் ஆகிவிட்டதால், தமிழக அரசு அவரை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி வரும் மார்ச் 2ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி