Published : 19,Apr 2017 12:40 PM

காதலியை விஷம் அருந்த சொல்லிவிட்டு தப்பித்த காதலன்

suicide-issue-for-love

திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் காதலியை விஷம் அருந்த சொல்லிவிட்டு காதலன் தப்பித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பல்லவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விஜயபிரபு, அதே பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். விஜயலட்சுமி முதலில் விஷம் அருந்திவிட, விஜயபிரபு விஷம் அருந்த மறுத்துவிட்டார். ஆனால் விஜயலட்சுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார். ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகளை தற்கொலைக்கு தூண்டியதாக விஜயபிரபு மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயலட்சுமியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.