[X] Close

நண்பர்களுக்கிடையே தகராறு : ஒருவர் அடித்துக்கொலை

One-person-was-killed-because-of-the-problem-among-friends-in-Pollachi

பொள்ளாச்சி அருகே நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி நாகூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரும் கேரள மாநிலம் வண்ணாமடை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல் செல்வராஜை, சுப்பிரமணியம் நட்பு நட்பு ரீதியாக பார்க்க வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதில் செல்வராஜ் சுப்பிரமணியை தள்ளிவிட்டு நெஞ்சு மேலேறி அடித்ததாக கூறப்படுகிறது. 

Image result for அடித்துக் கொலை


Advertisement

இதில் நிலைகுலைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து நண்பர் செல்வராஜ், அந்த இடத்தை விட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தலைமறைவான செல்வராஜ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close