[X] Close

இளம், பெண் இயக்குனர் மர்ம மரணம்: கொலையா?

Young-Malayalam-director-Nayana-Suryan-found-dead

இளம் மலையாள பெண் இயக்குனர் நயன சூர்யன் அவரது வீட்டில் மர்மமான முறையில்  உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது கொலையா, தற்கொலையா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

கேரள மாநிலம் கொல்லம் அருகிலுள்ள கருநாகப்பள்ளியை சேர்ந்தவர் நயன சூர்யன். சினிமாவுக்காக திருவனந்தபுரத்தில் தங்கி இருந்தார். சமீபத்தில் மறைந்த, பிரபல மலையாள இயக்குனர் லெனின் ராஜேந்திரனிடம் உதவி இயக்குனராக சேர்ந்த அவர், சந்தோஷ் சிவன், கார்த்திகா, நித்யா மேனன் நடித்த ’மகரமஞ்சு’ படத்தில் பணியாற்றினார்.


Advertisement

பின்னர், மம்மூட்டி நடிப்பில் கமல் இயக்கிய ’உடோப்பியாயிலே ராஜாவு’ படத்தி லும் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அவர், பல விளம்பர படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு, ’பக்‌ஷிகளுடே மனம்’ என்ற படத்தை இயக்கினார். இதில் மைதிலி, விஜய் பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வரவேற்பை பெற்றிருந்தது. ஏராளமான நாடகங்களையும் இயக்கியுள்ளார். 


Advertisement

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அவர் உடலை கைப்பற்றிய போலீசார், இது கொலையா, தற்கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலதிக தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. 


Advertisement

Advertisement
[X] Close