[X] Close

தாங்க்ஸ் தலைவா....ரஜினிக்கு சச்சின் போட்ட ட்வீட்

sachin-tendulkar-say-thanks-to-rajinikanth

சச்சினின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் வெற்றியடைய நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் சச்சின்.

ஏர்.ஆர். ரஹ்மான் இசையில், ஜேம்ஸ் எரிக்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற படம் மே 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் தமிழ் மொழிக்கான டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.

இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றும், கடவுளின் ஆசி எப்போதும் ‌உங்களுக்கு இருக்கும் என்றும் ரஜினி தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.‌ வாழ்த்துக்கூறிய ரஜினிக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நன்றி தெரிவித்துள்ளார். தாங்க்ஸ் தலைவா....தமிழில் இந்தப் படத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் என சச்சின் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டரில் தலைவா என்ற வார்த்தையையே அப்படியே ஆங்கிலத்தில் பதிவிட்டிருக்கிறார் சச்சின்.


Advertisement
Related Tags :

Advertisement

Advertisement
[X] Close