Published : 23,Feb 2019 10:24 AM
“எனக்குப் பின் கலி.பூங்குன்றன்தான் தலைவர்” - கி.வீரமணி அறிவிப்பு

திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கவிஞர் கலி.பூங்குன்றனை தற்போதைய தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூக நீதி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் அமர்வில் அக்கட்சியில் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அப்போது, ஆதிக்கத்தையும், ஆக்கிரமிப்பையும் என்றும் பகுத்தறிவு மூலம் திராவிடர் கழகம் எதிர்க்கும் எனத் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, நெருக்கடி காலத்திலும் சிறப்பாக பணியாற்றிய கலி.பூங்குன்றனை திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக அறிவிப்பதாக தெரிவித்தார்.