[X] Close

தேமுதிக என்னும் பழம் நழுவுமா ? பாலில் விழுமா ?

Will-DMDK-join-alliance-with-DMK---Million-dollar-question-once-again

மக்களவை தேர்தலுக்கான கூட்டணியில் யார் யார் எந்த கூட்டணியில் இடம்பெறுவார்கள் என்பதெல்லாம் போய், தேமுதிக யார் பக்கம் என்பதே இப்போது ஹாட் டாபிக். அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என தமிழிசை தொடர்ந்து சொல்ல்வி வருகிறார். தேமுதிகவோடு கூட்டணி குறித்து பேசவில்லை என ஸ்டாலின் சொல்லி விட்டார். இருந்தும் ஏன் தேமுதிகவுக்கு இத்தனை எதிர்பார்ப்பு.


Advertisement

Image result for vijayakanth karunanidhi

திமுக தலைவராக கலைஞர் இருந்த போது 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை உச்சத்தில் இருந்தது. அப்போது தேமுதிகவை கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டது. அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக கூட்டணியில் இருக்குமா என்ற கேள்விக்கு "பழம் நழுவி பாலில் விழும்" என்று தெரிவித்தார். ஆனால் மறுநாளே தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தார். விளைவு மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார் விஜயகாந்த். ஆனால், அந்தக் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் நின்று தோல்வியை சந்தித்தார். இதனால், தேமுதிவின் வாக்கும் செல்வாக்கும் குறைந்தது.


Advertisement

2005 இல் கட்சியை தொடங்கிய விஜயகாந்த், "மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி" என தெரிவித்தார். பின்பு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 232 தொகுதிகளில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தவிர மற்றவர்கள் அனைவரும் தோல்வியை தழுவினர். விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக நுழைந்தார். இதனையடுத்து 2009 இல் நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் தேமுதிக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. ஆனால் 40 தொகுதியிலும் தோல்வி கண்டது. 


Advertisement

முதல் முறையாக தேமுதிக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த். அந்தத் தேர்தலில் அதிமுக தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 29 இல் வெற்றிப் பெற்று, விஜயகாந்த் எதிர்கட்சித் தலவைராகவும் உயர்ந்தார். பின்னர், அதிமுகவுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக தனியாகவும், திமுக ஒரு அணியாகவும் மூன்றாவது அணியாக தேமுதிக தலைமையில், பாஜக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தேமுதிக போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.  

Image result for makkal nala kootani

இப்போது பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தொகுதி பங்கீடு இழுபறியில் இருக்கிறது. இதனிடையே நேற்று திடீரென காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை சந்தித்தார். பின்பு, இன்று காலை நடிகர் ரஜினிகாந்தும் சந்தித்தார். எல்லோரும் சொல்லும் ஒரே காரணம் விஜயகாந்த் உடல்நலனை விசாரிக்க வந்தோம் என்று. ஆனால், இவற்றையெல்லாம் விட மிகப்பெரிய ட்விஸ்ட், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்ததுதான். அவரும் உடல்நலம் விசாரிக்க வந்ததாகவே சொன்னார், கூட்டணி பேசவில்லை என்றார். "திமுகவுடன் தேமுதிக சேருமா" என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு "உங்கள் நல்ல எண்ணத்துக்கு பாராட்டுகள்" என்றார். அதாவது திமுக - தேமுதிக இணைவது என்பது நல்ல எண்ணம் என்று கூறி, அதனை எதிர்பார்ப்பதையும் ஸ்டாலின் உறுதி செய்கிறார். 

தேர்தல் மேகம் திரண்டு வரும் நேரத்தில் விஜயகாந்த்தை உடல்நலன் விசாரிக்க மட்டுமே தலைவர்கள் சென்றதாக நாமும் நம்பலாம் !!!! 


Advertisement

Advertisement
[X] Close