[X] Close

பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்

OPS-meets-Amit-shah-at-Madurai

மதுரை வந்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.


Advertisement

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது பாஜக. அதிமுக கூட்டணியில் அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு அந்தக் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று வந்தார். அங்கிருந்து அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரியில் நடை பெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். 


Advertisement

இக்கூட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட 18 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தேர்தல் களப் பணிகள், வியூகம் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் வந்த அவர், ஹெலிகாப்டர் மூலமாக ராமநாதபுரம் செல்கிறார். அங்கு பட்டணம் காத்தான் பகுதியில், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நாகை ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தில் அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அவருடன் அமைச்சர் செல்லூர் ராஜூவும் இருந்தார். இந்த சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடவுள்ள 5 தொகுதிகள் எவை என்பது குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது. 


Advertisement

Advertisement
[X] Close