Published : 22,Feb 2019 01:58 AM

ஆஸி.தொடரில் ஹர்திக் பாண்ட்யா விலகல், ஜடேஜா சேர்ப்பு

Pandya-ruled-out-of-Australia-T20s-and-ODIs

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியின் இணைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையே, இரண்டு டி 20 மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டி தொடர் நடக்கிறது. முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவும் இடம் பெற்றிருந்தார். ஆனால் முதுகுவலி காரணமாக இந்த தொடரில் அவர் இருந்து விலகியுள்ளார். அவருக்கு ஓய்வு அளித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவக் குழு, காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அடுத்த வாரம் முதல் மேற்கொள்ளுமாறு அறிவுறுத் தியுள்ளது. 

அவருக்கு பதிலாக, ஒரு நாள் தொடருக்கு மட்டும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்