Published : 21,Feb 2019 03:05 PM

“உழைக்கும் மக்களை கொண்டது தமிழ்நாடு” - குடியரசுத் தலைவர்

Tamil-Nadu-have-many-hard-workers---Ramnath-Kovind

தொன்மையான கலாச்சாரம் மற்றும் உழைக்கும் மக்களை கொண்டது தமிழ்நாடு எனக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1918ஆம் ஆண்டு காந்தியடிகளால் சென்னை தியாகராயநகரில் நிறுவப்பட்ட தக்ஷண பாரத ஹிந்தி பிரசார சபாவில், அவரது சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நீதிபதி சிவராஜ் வி.பாடில் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, 15 புள்ளி 2 அடி உயரமுள்ள காந்தியின் திருவுருவச் சிலையை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார். 

இதையடுத்து பிரசார சபா வரலாற்று புத்தகத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். பின்னர் பேசிய ராம்நாத் கோவிந்த், தொன்மையான கலாச்சாரம் மற்றும் உழைக்கும் மக்களை கொண்டது தமிழ்நாடு எனத் தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், சுப்பிரமணிய பாரதி எவ்வாறு கவிதையின் மூலம் தமிழை வளர்த்தாரோ, பெரியார் தனது கருத்துகள் மூலம் விடுதலை ஏற்படுத்தினாரோ, அதேபோல ஒருவருடைய எண்ணம் அனைவரும் சேர வேண்டும் என்பதற்காக காந்தியடிகள் இந்தி மொழியை வளர்க்க முற்பட்டார் எனத் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்