உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ் - இ -முகமது அமைப்பு ஈடுட்டது. இதையடுத்து அந்த நாட்டுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு போட்டிகளிலும் இந்தியா விளையாடக்கூடாது எனவும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை புறக்கணிக்க வேண்டும் என இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தினார்.
ஆனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘இந்தியா டுடே’ செய்திக்கு பேட்டியளித்தார். அப்போது, “உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடினால் இந்தியாதான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாம் விளையாடாமல் போனால், பாகிஸ்தான் வெற்றி பெறும்.
இதனால் அவர்கள் எளிதில் வாங்கும் இரண்டு புள்ளிகளை விடக்கூடாது. உலகக்கோப்பைப் போட்டியில் இதுவரை ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை இந்திய அணி தோற்கடித்துள்ளது. அதனால் பாகிஸ்தான் அணி போட்டியில் முன்னோக்கிச் செல்லாமல் இருக்க நாம் முட்டுக்கட்டை போட வேண்டும்.
ஆனால், பாகிஸ்தானுடன் விளையாடுவோமா என்ற கேள்விக்கு நான் நாட்டின் பக்கமே நிற்கிறேன். இந்திய அரசு என்ன முடிவு செய்தாலும் அதற்கு கட்டுப்படுகிறேன். நாம் பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் இந்தியாவுக்குதான் இழப்பு.” எனத் தெரிவித்தார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'