Published : 11,Jan 2017 07:07 AM
எள்ளளவும் பின்வாங்க மாட்டோம்.. ஜல்லிக்கட்டு நிச்சயம்: முதலமைச்சர் பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் எனவும், ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் எனவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. எனவே இந்தாண்டாவது பொங்கலின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது எனவும், ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் எனவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் கட்டிக்காக்கப்படும் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு முரணாக தமிழக அரசால் சட்டம் இயற்ற இயலாது எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை பிராணிகள் வதை தடுப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.