திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு - காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு - காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு - காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்

திமுக தலைமையிலான மக்களவைத் தேர்தல் கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், நேற்று அதிமுக-பாஜக-பாமக கூட்டணி உறுதியானது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 5 தொகுதிகளும், பாமகவிற்கு 7 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று திமுக எம்பி கனிமொழி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் தமிழகத்தில் 9 மற்றும் புதுச்சேரியில் ஒன்று என மொத்தம் 10 தொகுதிகள் கேட்டதாக கூறப்படுகிறது. அது உறுதி செய்யப்பட்டதாகவும், இன்று ஸ்டாலின் அதை அறிவிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தமிழக நிர்வாகிகள் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலை 6 மணிக்கு தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதலாக இரண்டு மணி நேரம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடந்தது. காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் பேச்சுவார்த்தை நீடித்ததாக கூறப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் தலைவர்களிடையே மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆலோசனை நடத்தினார். 

இதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்தனர். அதன்பின்னர், காங்கிரஸ் தலைவர்களும் அறிவாலயம் வந்தனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்த பின்னர் தொகுதிப் பங்கீடு அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் ஒரு தொகுதியும், தமிழகத்தில் 9 தொகுதிகளும் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com