ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைவதற்காக 15 ஆவது வயதில் சிரியா சென்ற பிரிட்டன் சிறுமியின் குடியுரிமையை அந்நாட்டு அரசு பறிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஷமிமா பேகம், 2015ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் பிரிட்டனை விட்டு வெளியேறினார். சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் பேகம் சேர்ந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும், பிரிட்டன் அரசும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கடைசி பிடியாக இருக்கும் பகோஸ் பகுதியில் அரசுப் படைகள் இறுதிக் கட்ட சண்டையை தீவிரப்படுத்தியதை அடுத்து, அங்கு வசித்து வந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த முகாமில் ஒரு வார கைக்குழந்தையுடன் பேகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர், பிரிட்டனுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் அவரது பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்ய, உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பேகமின் தாயார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், குடியுரிமை ரத்து செய்யப்பட்டாலும், நாடு இல்லாத அகதியாக பேகம் மாறமாட்டார் என பிரிட்டன் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம், பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாக பேகம் குடும்பத்தின் வழக்கறிஞர் தஸ்னிமே தெரிவித்துள்ளார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!