புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில் நியூசிலாந்தில் இன்று நாடாளுமன்றம் கூடியதும் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
துணை பிரதமர் விண்ட்ஸ்டன் பீட்டர்ஸ் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு கட்சி பேதமின்றி, அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து, தீர்மானத்தை நிறைவேற்றினர். இதைத் தொடர்ந்து பேசிய துணை பிரதமர் பீட்டர்ஸ், பயங்கரவாதத்தால், இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது எனத் தெரிவித்தார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும், இந்தியர்களுக்கும், நியூசிலாந்து மக்கள் சார்பில்ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பீட்டர்ஸ் பேசினார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்