[X] Close

“அதிமுக-பாஜக-பாமக கூட்டணியால் திமுக கூட்டணிக்கே பலம்” - திருமாவளவன்

BJP-ADMK-PMK-Alliance-give-more-power-to-DMK-lead-Alliance---Thirumavalavan

அதிமுக-பாஜக-பாமக கூட்டணி அமைத்திருப்பது திமுக தலைமையிலான கூட்டணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆந்திராவில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுகின்ற கூட்டணியில் சேர்வதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். தமிழகத்தில் அதிமுக-பாமக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுகவுடன் பாஜகவும் கூட்டணி அமைக்கும் எனத் தெரிய வருகிறது. மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவும், மாநிலத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும் கூட்டணி வைப்பது, திமுக தலைமையிலான கூட்டணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவிற்கு எதிரான உளவியல் மனநிலை மக்களிடத்தில் வலுவாக உள்ளது. அதேபோன்று மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கிற அதிமுகவுக்கும் எதிரான மனநிலை மக்களிடத்தில் வலுவாகிவுள்ளது. 


Advertisement

மேலும், தற்போது அதிமுகவுடன் பாமகவும் கூட்டணி வைத்திருப்பது திமுகவிற்கு கூடுதல் வலிமையை அளிக்கும். தொகுதி பங்கீடு தவிர வேறென்ன பேரங்கள் நடத்தினார்கள் என்பது கடந்த ஒரு வாரத்தில் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளது. பாமகவை கூட்டணியில் சேர்த்ததால், ஜெயலலிதாவிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது. பாமக எந்த அணியில் சேர்ந்தாலும், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு ஒரு மாயை என்பதை 2009ஆம் ஆண்டு தேர்தல் உறுதிப்படுத்தியது. 

ஜெயலலிதா இருக்கும்போது, பாமக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி என்பதை தோலுறித்து காட்டியவர். பாமக தங்கள் கூட்டணி தேவையில்லை என்பதால் அந்தத் துணிச்சல் முடிவை எடுத்தார். 2016ஆம் ஆண்டு பாமக நிறுவனர் பேசிய போது, இனி எந்தக் காலத்திலும் கழகங்களுடன் கூட்டணி இல்லை என்றார். ஆனால் இன்று மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது தனது கட்சியினரை ஏமாற்றும் செயலாகும்” என்றார்.  


Advertisement

Advertisement

Advertisement
[X] Close