[X] Close

டிடிவி.தினகரனுக்கு 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு

8-mlas-supporting-ttv-dinakaran

டிடிவி.தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், அவருக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சென்னை அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் 8 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு, பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஏழுமலை, ஆத்தூர் எம்.எல்.ஏ சின்னத்தம்பி, தென்காசி எம்.எல்.ஏ, செல்வமோகன்தாஸ், சாத்தூர் எம்.எல்.ஏ சுப்பிரமணியம் மற்றும் அ.தி.மு.க அம்மா அணியின் செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. வெற்றிவேல், ’சசிகலா குடும்பம் மீது தேவையின்றி பழி சுமத்துகின்றனர். 30 அமைச்சர்கள் சேர்ந்தது மட்டும் கட்சி கிடையாது. தவறு செய்த சில அமைச்சர்கள் பயப்படுகிறார்கள். சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கு அச்சம் வந்துள்ளது’ என அவர் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close