Published : 19,Apr 2017 03:41 AM

ஒன்றிணையும் அதிமுக... திணரும் தினகரன்

2-factions-of-admk-pressures-dhinakaran

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழகத்திற்கு 2 முதலமைச்சர்களைத் தந்துவிட்ட ஆளும் அதிமுகவில் குழப்பங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் வேகமெடுத்துள்ள அதேநேரத்தில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஒதுக்கி வைக்க முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தைப் பெற 50 கோடி ரூபாய் லஞ்சம் வழங்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் டிடிவி தினகரனுக்கு நெருக்கடி முற்றியுள்ள நிலையில், அவரை ஓரங்கட்டுவதை அதிமுகவின் ஒரு பிரிவினர் எதிர்க்கின்றனர். முதலமைச்சரும், அமைச்சர்களும் ஓரணியில் திரண்டுள்ள நிலையில், அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்பட மூத்த தலைவர்களின் கூட்டத்தை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் தொடங்கும் முன்பாக, டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினகரனுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்கள் இருப்பதால் சில முக்கிய முடிவுகள் எடுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இரு அணிகளும் இணைந்தால் அது தினகரனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்