[X] Close

ஓபிஎஸ்- இபிஎஸ் இணையும் யுபிஎஸ் கூட்டணி

ops-and-eps-makes-an-alliance

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுப்பட்ட நிலையில், அதில் மேலும் ஒரு புதிய அணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.


Advertisement

சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாளுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். அன்றிரவே முதல்வராக ஒ.பன்னீர்செல்வமும், அவருடன் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களும் பதவியேற்றனர்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, டிசம்பர் 31ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். பிப்ரவரி 5ஆம் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காத நிலையில், திடீரென ஜெயலலிதா சமாதியில் மவுன அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம், தம்மை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாக கலகக் குரல் எழுப்பினார். ‌ ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதால், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். பிப்ரவரி 14ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால், சசிகலா சிறை செல்ல நேர்ந்தது. அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்க, பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒ.பன்னீர்செல்வம் அணிக்குச் சென்றனர். சசிகலா சிறை செல்லும் முன்பாக, அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனை நியமித்த சில வாரங்களிலேயே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்திற்கும், கட்சியின் பெயருக்கும் சசிகலா தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் உரிமை கோர, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.


Advertisement

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித் துறை சோதனை எதிரொலியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் வாங்கியதாக டெல்லியில் இடைத்தரகர் சுகேஷ் கைது செய்யப்பட, டிடிவி தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், டிடிவி தினகரனுக்கு நெருக்கடி அதிகரிக்க, அவரையும், அவரது குடும்பத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள முதலமைச்சரும், அமைச்சர்களும் கூடி தீர்மானித்துள்ளனர்.

Related Tags : ops eps allianceeps ops

Advertisement

Advertisement
[X] Close