"விபத்து பகுதிகளுக்கு இனி 8 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் செல்லும்" அமைச்சர் விஜயபாஸ்கர்

"விபத்து பகுதிகளுக்கு இனி 8 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் செல்லும்" அமைச்சர் விஜயபாஸ்கர்
"விபத்து பகுதிகளுக்கு இனி 8 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் செல்லும்" அமைச்சர் விஜயபாஸ்கர்

விபத்து நேர்ந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றடையும் நேரம், 8 நிமிடமாக குறைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்திலேயே முதல்முறையாக 108 ஆம்புலன்சிற்கு எந்தவிதமான பிரதிபலனும் இல்லாமல் விபத்து நடந்த இடத்திலிருந்து போனில் தகவல் தெரிவித்தவர்கள் மற்றும் சிகிச்சை பெற்றவர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். மேலும் தமிழகத்தில் முதல்முறையாக முதலுதவி பெட்டிகளை அறிமுகப்படுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் "எந்தவித பிரதிபலனும் இல்லாமல் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து விபத்து நடந்த இடத்தில் இருந்து காயமடைந்தவரின் உயிரை காப்பாற்றியதற்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விபத்து நடந்த இடத்தில் இருந்து எந்தவித அச்சமும் இன்றி பொதுமக்கள் 108 எண்ணிற்கு தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் இதனால் அவர்களுக்கு வழக்கு உள்ளிட்ட எந்த பிரச்சினையும் இருக்காது. இது போன்ற தன்னலமற்ற தகவல்களை தெரிவிக்கும் நபர்களுக்கு இனிவரும் காலங்களில் முதலுதவி பெட்டிகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். 

தற்போது 108 ஆம்புலன்சில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது இதனால் விபத்து நடந்த இடத்தை கண்டறிந்து விரைந்து செல்வது எளிமையாக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் விபத்து நடந்தால் 108 ஆம்புலன்ஸ் செல்வதற்கு தற்போது 8.36 நிமிடமாக உள்ளது. அது மூன்று மாதத்திற்குள் எட்டு நிமிடமாக குறைக்கப்பட்டு அமெரிக்காவிற்கு இணையான உலக சாதனையை தமிழக சுகாதாரத்துறை படைக்க உள்ளது” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com