[X] Close

டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை

Chris-Gayle-reaches-historic-milestone--becomes-first-to-score-10-000-T20-runs

வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடி மன்னனாக வலம் வரும் கிறிஸ்கெய்ல் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் இன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக ஆடி வரும் கிறிஸ் கெயில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கெய்லுக்கு அடுத்தப்படியாக மெக்கல்லம் 7524 ரன்களுடன் 2-வது இடத்திலும், பிரட் ஹோட்ஜ்க் 7338 ரன்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close