[X] Close

10 ரூபாய்க்கு சேலை.. கூட்ட நெரிசலில் திருட்டு..!

Telangana-Mall-Sees-Stampede-Like-Situation-Over-Sarees-For-Rs--10

10 ரூபாய்க்கு சேலை என்ற அறிவிப்பால் ஷாப்பிங் மாலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.


Advertisement

ஹைதராபாத் அருகே உள்ளது சிஎம்ஆர் ஷாப்பிங் மால். இங்கு ஒரு சேலை 10 ரூபாய் என தள்ளுபடி விலைக்கு சேலை விற்பனை செய்யப்பட்டது. இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதால் ஷாப்பிங் மாலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. அனைவரும் 10 ரூபாய் சேலையை விரைவில் வாங்க வேண்டும் என முண்டியத்துக் கொண்டனர்.

இதனையடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல பெண்கள் காயம் அடைந்தனர். கூட்ட நெரிசலில் பெண் ஒருவரின் தங்கச் செயினும் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தியதோடு, திருட்டு தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close