Published : 17,Feb 2019 02:32 AM
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நாளை தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதாகக் கூறி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பல்வேறு நிபந்தனைகளுடன் ஆலையை திறப்பதற்கு அனுமதி அளித்தது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனமும், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடைக் கோரி தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தன.
இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு நாளை வழங்கப்படுகிறது.