[X] Close

பிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..!

India-s-Fastest-Train--Vande-Bharat-Express--Breaks-Down-Day-After-Launch

பிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் முதல் பயணத்திலேயே பழுதாகி பாதியில் நின்றது. இதனால் பயணிகள் வேறு ரயில் மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாட்டின் அதிவேக விரைவு ரயிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது வந்தே பாரத் ரயில் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் முதல் பயணத்திலேயே வந்தே பாரத் ரயில் பழுதாகி பாதியில் நின்றது. முதல் முறையாக டெல்லியிலிருந்து வாரணாசிக்கு வெற்றிகரமாக வந்தடைந்த வந்தே பாரத் ரயில் மீண்டும் டெல்லிக்கு திரும்பிய போது தான் பாதி வழியில் பழுதாகி நின்றது. டெல்லியில் இருந்து 200 கி.மீ தொலைவுக்கு முன்னதாக ரயில் பழுதாகி நின்றதால் அதில் பயணித்த பயணிகள் மற்றொரு ரயில் மூலம் மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.


Advertisement

இதுகுறித்து ஒருவர் கூறும்போது, “ காலை 5 மணியளவில் ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரயில் அப்படியே நின்றது. அதற்கு முன்னதாக வெறும் 10 கி.மீ வேகத்தில் தான் ரயில் பயணித்தது. அதுமட்டுமில்லாமல் புகை வாடையும் அதிகமாக வந்தது. ரயிலின் உட்கட்டமைப்பில் ஏதேனும் பழுது இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனால் ரயிலில் இருந்து இறங்க வேண்டிய நிலை வந்தது” எனக் கூறினார். முன்னதாக டெல்லியிருந்து வாரணாசிக்கு ரயில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பழுதடைந்த ரயிலை சரிசெய்ய, அது மீண்டும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close