Published : 15,Feb 2019 11:06 AM

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு முழு ஆதரவளிப்போம் - ராகுல் காந்தி 

Stand-With-Government--No-Other-Discussion--Rahul-Gandhi-On-Pulwama

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், ராணுவ வீரர், மத்திய அரசு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக, டெல்லியில் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய ராகுல்காந்தி, “உயிரிழந்த வீரர்களுக்காக இது துக்கம் அனுசரிக்க வேண்டிய நேரம், சோகத்தை பகிர்ந்துகொள்ளும் நேரம் மற்றும் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நேரம். இதுதொடர்பாக நாங்கள் அரசுக்கும் பாதுகாப்‌புப் படை வீரர்களுக்கும் முழு ஆதரவைத் தருகிறோம். 

நம் அன்புமிக்க வீரர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் விவாதிக்கப்‌போவதில்லை. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை இந்த விவகாரத்தில் ஆலோசிப்பதற்கோ விவாதிப்பதற்கோ இல்லை. காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு முழு ஆதரவளிக்கும்.

                      

அன்பால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியாவை, வெறுப்பும், கோபமும் எதுவும் செய்துவிடமுடியாது. தீவிரவாதத்தை ஒழிக்க, மத்திய அரசுடன் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்படும். நாட்டை எந்த சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர்கள் எழுப்பிய அரசியல் ரீதியிலான கேள்விகளை தவிர்த்தார் ராகுல் காந்தி.

மன்மோகன் சிங் பேசுகையில், “இன்று மிகவும் சோகமான நாள். நம்முடைய நாடு 40 ராணுவ வீரர்களைஇழந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். நாட்டிற்கு தேவையானவற்றை எல்லோரும் ஒருங்கிணைந்து செயலாற்றுவோம்” என்று கூறினார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்