காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுங்கள் என இந்திய மக்கள் கொந்தளித்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விடுப்பில் சொந்த ஊர் சென்று, பின் மீண்டும் பணியில் சேர வந்த வீரர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 350 கிலோ வெடிபொருட்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் இறந்துள்ளதாக சி.ஆர்.பி.எப் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய மக்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இது எதிரொலித்து வருகின்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை விடக்கூடாது, இந்திய ராணுவம் களத்தில் இறங்க வேண்டும் எனக் கண்டனக் குரல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கும் இரங்கல்கள் குவிந்து வருகின்றன.
தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பொறுப்பேற்றுள்ள அமைப்பிற்கும், தாக்குதலுக்கு தலைமை தாங்கிய அடில் அகமதுவிற்கும் எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. அதில், இந்த தீவிரவாதக் கூட்டத்தை விடவேண்டாம், இந்திய பதிலடி அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்