பயங்கரவாத தாக்குதலால் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களுக்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது முதல் அரசியல் பேட்டியை தவிர்த்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் முதல்முறையாக ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அத்துடன் உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பேரணி, ஆலோசனைக்கூட்டம், அரசியல் வட்டாரப் பேச்சு என பிரியங்கா அங்கு தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார். அத்துடன் தனது முதல் அரசியல் பேட்டியை இன்று உத்தரப் பிரதேசத்தின், லக்னோவில் இருந்து தொடங்க அவர் திட்டமிருந்தார். இந்தப் பேட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே, இன்று காஷ்மீர்-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் தாக்குதலால் இந்திய ராணுவ சி.ஆர்.பி.எப் வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். பின்னர் இந்த எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதல் அரசியல் பேட்டியை லக்னோவில் தொடங்க வந்த பிரியங்கா காந்தி, சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்துள்ள இந்தத் தருணத்தில் அரசியல் பேசுவது சரியாக இருக்காது எனக்கூறி பேட்டியை தவிர்த்துவிட்டார். அத்துடன் பயங்கரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த வீரர்களுக்காக பேட்டியளிக்க வந்த மேடையிலேயே அவர் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!