ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். கஜா புயலின் தாக்கத்தாலும், பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியாலும் ஏழைகள் பாதிக்கப்பட்டு உள்ளதை கருத்தில் கொண்டு, இந்த நிதியுதவி அறிவிக்கப்படுவதாகக் கூறினார். இம்மாத இறுதிக்குள் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அனைத்து பயனாளிகளுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நிதமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் தமிழக அரசின் அறிவிப்பு சட்டவிரோதம் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதனிடையே இதுகுறித்து நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி