[X] Close

25 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத்தில் புலி - ஆர்வலர்கள் மகிழ்ச்சி

Tiger-spotted-in-Gujarat-after-25-years

25 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் காட்டில் புலியின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்


Advertisement

குஜராத் மாநிலம் சிங்கங்களுக்கு புகழ்பெற்றது. அம்மாநிலத்தில் உள்ள கிர் காடுகளில் அதிக அளவில் ஆசிய சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில் தங்கள் மாநிலத்தில் புலிகளும் தென்பட தொடங்கியுள்ளதாக குஜராத் மாநில வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 


Advertisement

குஜராத் மாநிலத்தின் வடக்கு மாவட்டமான மாகிசாகரில் உள்ள வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை முதலில் மறுத்த வனத்துறை பிறகு வனப்பகுதியின் 5 இடங்களில் கேமராவை பொருத்தி கண்காணித்து வந்தனர். புலியை பார்த்ததாக பொதுமக்கள் சுட்டிக்காட்டிய இடம் மட்டுமல்லாமல் காட்டுக்குள் உள்ள நீர்நிலைப்பகுதிகள் அருகேயும் கேமராக்கள் பொருத்தப்பட்டன.  இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்ட ஒரு கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகியிருப்பதாக வனத்துறை அதிகாரி பர்மார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் மாநில வனத்துறை அமைச்சர் கான்பத் வசவா, கேமராவில் பதிவாகியுள்ள புலிக்கு 7 அல்லது 8 வயது இருக்கலாம். இது ராஜஸ்தான், மகாராஷ்டிரா அல்லது மத்திய பிரதேசத்தில் இருந்து குஜராத்துக்குள் வந்து இருக்கலாம். அதேபோல் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் இருந்து ஒரு புலி காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்த தகவலின் உறுதி தன்மையை அறிய முயற்சி செய்து வருகிறோம். உள்ளூர் வாசிகள் புலி நடமாட்டம் இருப்பதாக கூறியதை அடுத்து கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்தோம். தற்போது சந்தேகம் தீர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

இது குறித்து கூறிய வனத்துறை, குஜராத் மாநில காடுகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் நடமாட்டம் இருந்ததாகவும், அதற்கு பின்பு புலிகள் தென்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். தற்போது மீண்டும் புலிகள் காணப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், 'ஒரே மாநிலத்தில் புலிகளும், சிங்கங்களும்' என்ற வாசகத்தின் கீழ் குஜராத் மாநிலம் புலிகள் குறித்த விளம்பரத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close